நாகப்பட்டினம்: கூரை வீடுகள் எரிந்து நாசம்

65பார்த்தது
நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு காவல் நிலையத்தில் உட்பட்ட பகுதியில் திருமாலம் தங்கையன் குடும்பத்தினர் கூரை வீட்டில் வசித்து வந்தனர். இந்த கூரை வீட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் வீட்டிலிருந்து சிலிண்டர் வெடித்து வீடு முழுவதும் எரிந்தது.

மேலும் அவர் வீட்டிற்கு அருகில் இருந்த நாகன்கண்ணி என்பவரின் கூரை வீடும் முற்றிலும் சேதமடைந்தது. தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். இது குறித்து தலைஞாயிறு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி