நாகப்பட்டினம் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் சங்கமம்-நம்ம ஊரு திருவிழாவிற்கான கலைக் குழுக்கள் தேர்வு மார்ச் 22 மற்றும் 23 ஆகிய நாட்களில் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இவ்விழாவில் நிகழ்ச்சி நடத்த விரும்பும் கலைக்குழுக்களின் நிகழ்ச்சி பதிவு தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் மார்ச் 22 மற்றும் 23 ஆகிய நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மேற்கொள்ளப்பட உள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள செல்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நிகழ்ச்சி பதிவுகள் மேற்கொள்ளப்பட உள்ளன. மாவட்ட அளவிலான தேர்வில் பங்கு பெற விரும்பும் கலைக் குழுக்கள் கலை பண்பாட்டுத் துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள கூகுள் பார்ம் மூலம் மார்ச் 20ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.