வேதாரண்யம் அருள்மிகு வேதாரண்யேஸ்வரர் திருக்கோவிலில் கார்த்திகை மாத பிரதோஷத்தை முன்னிட்டு இன்று சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன. மணிகர்ணிகைதீர்த்த குளத்தின் வடமேற்கு திசையில் அமர்ந்துள்ள நந்திகேஸ்வரருக்கும், வேதாரண்யேஸ்வரர் சன்னதிக்கு எதிரே உள்ள நந்திகேஸ்வரருக்கும் ஒரே நேரத்தில் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர், வேதாரண்யேஸ்வரருக்கும் நந்திகேஸ்வரருக்கும் தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வேதாரண்யேஸ்வரரின் அருளைப் பெற்றனர்.