புள்ளி இயல் சார்நிலை அலுவலர் சங்க மாநில செயற்குழு கூட்டம்

1பார்த்தது
புள்ளி இயல் சார்நிலை அலுவலர் சங்க மாநில செயற்குழு கூட்டம்
நாகப்பட்டினம் அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் தமிழ்நாடு அரசு புள்ளி இயல் சார்நிலை அலுவலர் சங்க மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. மாநிலத் தலைவர் பால் ஜெயக்குமார் தலைமையில் நடந்த கூட்டத்தில், நீக்கப்பட்ட புள்ளியல் ஆய்வாளர் பணியிடங்களை மீண்டும் உருவாக்க வேண்டும், புள்ளியியல் அலுவலர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதற்கு முன் பணியிட மாறுதல் வழங்க வேண்டும், புள்ளியியல் துணை இயக்குனருக்கு மேலான பதவிகளுக்கு 80:20 விகிதத்தில் பதவி உயர்வு வழங்க வேண்டும், நிர்வாக வசதிக்காக பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் புதிய அலுவலகங்கள் மற்றும் பணியிடங்கள் தோற்றுவிக்க வேண்டும், கள ஆய்வு மேற்கொள்ள போதுமான கால அவகாசம் நிர்ணயிக்க வேண்டும், அனைத்து மாவட்டங்களிலும் ஒரே மாதிரியாக புள்ளியியல் அலுவலர் பணியிடங்களாக மாற்ற உரிய பரிந்துரைகளை போலீஸ் துறைக்கும் அரசுக்கும் கூடுதல் தலைமைச் செயலாளர் ஆணையர் உத்தரவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்டத் தலைவர் விஜயகுமார் வரவேற்றார், முன்னாள் தலைவர் அந்துவன் சேரல் முன்னிலை வகித்தார். பொதுச்செயலாளர் ரமேஷ் வேலை அறிக்கையையும், பொருளாளர் அண்ணாமலை வரவு செலவு கணக்கினையும் சமர்ப்பித்தனர்.

தொடர்புடைய செய்தி