வேதாரண்யம் அடுத்த தகட்டூர் ஊராட்சியில் உள்ள மாப்பிள்ளை வீரன் திருமேனி அம்மன் கோவில் பங்குனி மாத திருவிழா கடந்த மாதம் 24 ஆம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான வாழைப்பழத்தை பக்தர்கள் மீது வீசும் வினோத திருவிழா நடைபெற்றது. தகட்டூர் பைரவநாத சுவாமி ஆலயத்திலிருந்து கப்பரை எடுத்து வரப்பட்டு, கோவிலை வலம் வந்து பின்பு வாழைப்பழம் வீசும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்கள் மீது வீசப்பட்ட வாழைப்பழங்களை பிடித்து சாப்பிட குழந்தை பாக்கியம் உண்டாகும், உடல் ஆரோக்கியம் மேம்படும் என்பதும் நம்பிக்கையாகும்.