நாகை: கடலில் பலத்த சூறைக்காற்று மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

372பார்த்தது
கடலில் பலத்த சூறைக்காற்று வீசுவதால் நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுதுறை, கோடியக்கரை, புஷ்பவனம், வெள்ளபள்ளம் உள்ளிட்ட பகுதி மீனவர்கள் இன்று மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இதனால் 500க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் மற்றும் மீன்பிடி வலைகள் கரையோரம் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலை இழந்துள்ளனர். காற்று குறைந்தவுடன் மீண்டும் மீன்பிடிக்க செல்வோம் என மீனவர்கள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி