நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் மற்றும் கீழ்வேளுர் சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட பல்வேறு கிராமங்கள் மற்றும் பேரூராட்சிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிக்கான கணக்கெடுப்பு படிவங்கள் வீடு வீடாக வழங்கும் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ப. ஆகாஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வேதாரண்யம் நகர்புறம், ஏரிக்கரை, தேரடி கீழவீதி, பூப்பட்டி, அண்டர்காடு கிராமம், கத்திரிப்புலம் மற்றும் வேளாங்கண்ணி பேரூராட்சி கொய்யாதோப்பு ஆகிய பகுதிகளில் இந்த ஆய்வு நடைபெற்றது. வாக்காளர் பட்டியலில் உள்ள பிழைகளை திருத்தி, புதிய வாக்காளர்களை சேர்க்கும் பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.