மாணவர்களை ரோஜாப்பூ கொடுத்து வரவேற்ற ஆட்சியர்

0பார்த்தது
நாகை காடம்பாடியில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளியில் விடுமுறை முடிந்து பள்ளிக்கு வந்த மாணவர்களை மாவட்ட ஆட்சியர் கே.ஜே. பிரவீன் குமார் ரோஜா பூ கொடுத்து வரவேற்றார். மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் கிறிஸ்தவர், இஸ்லாமியர் வேடம் அணிந்த மாணவர்கள் ஆட்சியரை வரவேற்றனர். தொடர்ந்து, பள்ளிக்கல்வித்துறை சார்பில் சீருடை, புத்தகங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார். அரசு பள்ளியில் சேர்ந்த மாணவர்களுக்கு துண்டு போர்த்தி உதவிகளையும் ஆட்சியர் வழங்கினார்.