நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் தொகுதி தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அவரிக்காடு அம்பேத்கர் நகரில் வசிக்கும் ஆதிதிராவிடர் குடும்பங்களுக்கு மயானம் செல்ல பாதை மற்றும் குடிநீர் வசதி ஏற்படுத்தித் தராத
திமுக அரசை கண்டித்து,
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தங்கள் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றியும், கருப்புப் பட்டை அணிந்தும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், 2026 சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்கும் ஜனநாயகக் கடமையை புறக்கணிப்பதாகவும் அறிவித்துள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.