திருஞானசம்பந்தர் திருக்கல்யாண நிகழ்ச்சி

3பார்த்தது
வேதாரண்யம் அருள்மிகு வேதாரண்யேஸ்வரர் திருக்கோவிலில் இன்று காலை திருஞானசம்பந்தருக்கும் தோத்திர பூரணி அம்மனுக்கும் திருமணக் காட்சி நடைபெற்றது. திருஞானசம்பந்தர் வருகை தந்த ஊர்களில் வேதாரண்யம் முக்கியமானது. இன்று காலை 11 மணிக்கு நடைபெற்ற இந்த திருமண நிகழ்வில், திருக்கோவிலில் இருந்து பூ பல்லாக்கில் திருஞானசம்பந்தர் வருகை தந்தார். அவருடன் யாழ்ப்பாண நாயன்மார், திருநீலகண்டர் நாயன்மார், முருகனார் நாயன்மார் உடனிருந்தனர். திருஞானசம்பந்தர் சன்னதியில் யாகம் வளர்த்து, அபிஷேகம் நடத்தி, திருஞானசம்பந்தருக்கும் தோத்திர கண்ணி அம்மையாருக்கும் திருமணம் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி