கோடியக்கரை: கடலில் தத்தளித்த மூன்று மீனவர்கள் மீட்பு

388பார்த்தது
கோடியக்கரை அருகே கடலில் மாயமான மீன்பிடி படகில் சென்ற மூன்று மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் கவிழ்ந்த படகை பிடித்துக்கொண்டு கடலில் தத்தளித்த நிலையில், கோடியக்கரையிலிருந்து சென்ற பைபர் படகு மூலம் வேதாரண்யம் நகராட்சிக்குட்பட்ட மணியன் தீவு கடற்கரை பகுதிக்கு கொண்டு வரப்பட்டனர். மூன்று பேருக்கும் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. இருப்பினும், மற்றொரு மீனவரான சின்னப்பா என்கிற அன்பு செல்வத்தை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி