பறவைகள் சரணாலயத்தில் சுற்றுலா வாசிகளுக்கு ஏமாற்றம்

0பார்த்தது
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடிக்கரையில் உள்ள உலகப் புகழ் பெற்ற ராம்சார் சைட் பறவைகள் சரணாலயத்திற்கு, வட துருவப் பகுதியிலிருந்து அக்டோபர் முதல் மார்ச் வரை வெளி மாநில மற்றும் வெளிநாட்டுப் பறவைகள் வரும். இந்த ஆண்டு செப்டம்பரிலேயே பறவைகள் வரத்து அதிகரித்து, தற்போது சீசன் உச்சத்தில் லட்சக்கணக்கான பறவைகள் குவிந்துள்ளன. இருப்பினும், கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் முனியப்பன் ஏரி, கெம்ப்ளாஸ்ட் பம்பிங் ஸ்டேஷன் மற்றும் கடற்கரை ஓரப் பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால், பறவைகள் பார்வையாளர்கள் பார்க்கும் இடத்திலிருந்து வெகு தொலைவிற்குச் சென்றுவிட்டன. இதன் காரணமாக, வெளி மாவட்டம், மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் பறவைகளைக் காண முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.

தொடர்புடைய செய்தி