பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை

0பார்த்தது
வங்க கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் நாகை, மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி, இன்று காலை முதல் சாரல் மழை பெய்து வந்த நிலையில், திடீரென இரவு நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, நாகூர், திட்டச்சேரி, கீழ்வேளூர், திருக்குவளை, திருப்பூண்டி, காமேஸ்வரம் உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்தது. இதனால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி