நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே ஆயக்காரன்புலம் கிராமத்தைச் சேர்ந்த சிவபாலன் என்பவரின் மனைவி காவியா (20), தனது 6 மாத குழந்தையுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். மாமியார் செந்தமிழ்செல்வி (ஆசிரியர்) மற்றும் மாமனார் பழனித்துறையின் (ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர்) கொடுமையே தற்கொலைக்கு காரணம் என காவியா இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டுள்ளார். கணவர் நல்லவர் என்றும், அவர் மீது எந்த தவறும் இல்லை என்றும் அவர் அதில் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.