இசை நடனம் நாடகம் இசைக்கருவிகள் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்

0பார்த்தது
இசை நடனம் நாடகம் இசைக்கருவிகள் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்
நாகப்பட்டினம் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் மாவட்டக் கல்வி தன்முனைப்புத் திட்டத்தின் கீழ், இசை, நடனம், நாடகம், இசை கருவிகளில் பயிற்சி வழங்கப்பட உள்ளது. பரதநாட்டியம், கரகம், சிலம்பம், கிராமிய நடனம், நாடகம், கர்நாடக சங்கீதம், உடுக்கை, பம்பை, நாதஸ்வரம், தவில், கீ-போர்டு, புல்லாங்குழல், ஹார்மோனியம், டிரம்ஸ், வயலின், வீணை உள்ளிட்ட கலைகளில் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி பெற விரும்புவோர் 19.02.2026க்குள் சுயவிவரத்துடன் 9003757531 என்ற வாட்ஸ்அப் எண்ணில் பதிவு செய்ய வேண்டும். 21.02.2026 முதல் வகுப்புகள் தொடங்கும். பயிற்சி நாகப்பட்டினம் நாலுகால் மண்டபம் அருகில் உள்ள குமரன் மண்டபம், பொன்னி கலையகத்தில் நடைபெறும். மாவட்ட ஆட்சித்தலைவர் ப. ஆகாஷ் இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி