போலீஸ் விசாரணைக்கு சென்ற இளைஞர் தற்கொலை

0பார்த்தது
போலீஸ் விசாரணைக்கு சென்ற இளைஞர் தற்கொலை
நாகை மாவட்டம், அடுத்த சின்னதம்பூர் கிராமத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர், உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது அங்கு ஒருவரின் நகை காணாமல் போனது. இது தொடர்பாக கார்த்திகேயன் உட்பட 10க்கும் மேற்பட்டோரை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். வீடு திரும்பிய கார்த்திகேயன், தன்னை நிர்வாணப்படுத்தி, வாயில் துணி வைத்து போலீசார் தாக்கியதாக தனது அண்ணனிடம் கூறி அழுததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் மனமுடைந்த கார்த்திகேயன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி