கோவையில் சாலை விபத்தில் கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். கோவை மதுக்கரை பகுதியில் நேற்று இரவு (பிப்., 13( நடந்த விபத்தில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதியது. இதில் தனியார் கல்லூரியில் 4ஆம் ஆண்டு படித்து வந்த மாணவர் ரோஷன் என்பவர் உயிரிழந்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவர் ரோஷன், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனின் உறவினர் என்பது தெரியவந்துள்ளது.