சிபிஐ கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு (101) இன்று காலமானார். அவரது மறைவையொட்டி சென்னையில் உள்ள மருத்துவமனையில் உள்ள அவரது உடலுக்கு நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் அஞ்சலி செலுத்தினார். அவரது எக்ஸ் பதிவில், பொதுவாழ்வில் மக்களுக்காகவே அப்பழுக்கற்று வாழ்ந்த பெருந்தமிழர். விளிம்பு நிலை மக்களின் உயர்வுக்கும், மேம்பாட்டிற்கும் வாழ்வினை ஒப்புவித்த இந்நூற்றாண்டின் ஈடு இணையற்ற மக்கள் போராளி. ஐயா நம்மை விட்டு மறைந்த செய்தியறிந்து பெருந்துயருற்றேன் என குறிப்பிட்டுள்ளார்.