
ஆவினில் ரூ.4 கோடிக்கு வெண்ணெய் ஊழல்
மதுரை ஆவினில் வடமாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட சுமார் ரூ.4 கோடி மதிப்புள்ள 81 டன் வெண்ணெய் கெட்டுப் போய் நிதியிழப்பை ஏற்படுத்தியிருப்பதாகவும், இதில் ஆவின் உயர் அதிகாரிகள் மற்றும் மதுரை மாவட்ட அதிகாரிகள் இணைந்து மோசடி செய்திருப்பதாகவும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என சங்கம் வலியுறுத்தியுள்ளது.

































