நாமக்கல் மண்டலத்தில், 1,000க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு, தினமும் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்நிலையில், இங்கு முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து ரூ.6ஆக நிர்ணயம் செயப்பட்டுள்ளது. கடந்த 5 நாள்களில் 25 காசுகள் விலை உயர்ந்து முட்டை கொள்முதல் விலை ரூ.6ஆக நிர்ணயம் செயப்பட்டுள்ளது. 55 ஆண்டு கால தமிழ்நாடு கோழிப்பண்ணை வரலாற்றில் முட்டை கொள்முதல் விலை ரூ.6 என்பது இதுவே முதல்முறை என கூறப்பட்டுள்ளது.