சேலம்: மகனைக் கொன்ற தாய்; திடுக்கிடும் தகவல்கள்

3165பார்த்தது
சேலம்:  மகனைக் கொன்ற தாய்;  திடுக்கிடும் தகவல்கள்
சேலம் மாவட்டம் எடப்பாடியில், குடித்துவிட்டு மனைவியை துன்புறுத்திய மகன் முத்துசாமியை, தாய் காளியம்மாள் மண்வெட்டியால் தாக்கி கொலை செய்தார். ஆறு மாதங்களுக்கு முன் மனைவி குழந்தைகளுடன் தாய் வீட்டிற்கு சென்ற நிலையில், நேற்று மதுபோதையில் வந்த முத்துசாமி, தாய் காளியம்மாளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை தாக்கியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த காளியம்மாள், மண்வெட்டியால் மகனை தாக்கியதில் அவர் உயிரிழந்தார். கொங்கணாபுரம் போலீசார் தாய் காளியம்மாளை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி