பள்ளிபாளையம்: கஞ்சா, போதை மாத்திரை விற்ற 17 போ் கைது

84பார்த்தது
பள்ளிபாளையம்: கஞ்சா, போதை மாத்திரை விற்ற 17 போ் கைது
பள்ளிபாளையம், வெப்படை சுற்றுவட்டாரத்தில் கஞ்சா, போதை மாத்திரைகளை விற்பனை செய்த 17 பேரை போலீஸார் கைது செய்தனர்.

திருச்செங்கோடு துணைக் காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணன் தலைமையில் பள்ளிபாளையம் காவல் ஆய்வாளர் தீபா, 10-க்கும் மேற்பட்ட போலீசார் போதைப்பொருள்கள் கடத்தலைத் தடுக்க பல்வேறு பகுதிகளில் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். பள்ளிப்பாளையம் சுற்றுவட்டாரத்தில் காவிரி, ஆவராங்காடு, சந்தைபேட்டை உள்ளிட்ட இடங்களில் கஞ்சா விற்பனை செய்த சுஜித் (27), மணிகண்டன் (26), சின்ராஜ் (23), தினேஷ்குமார் (22), வினோத்குமார் (30), நியூட்டன்மணி (21), கவுதம் (21), தனபால் (21), லட்சுமணன் ஆகிய 9 பேரை கைது செய்தனர்.

அதுபோல வெப்படை பகுதியில் கஞ்சா விற்பனை செய்த அஜய் (23), 17 வயது சிறுவன், போதை மாத்திரைகளை விற்பனை செய்த கிரிகரன் (27), தீபன் (23), கவுதம் (23) ஆகிய 5 பேரை கைது செய்தனர். மற்றொரு இடத்தில் புகையிலை விற்க சம்பத் (63), ரவிகுமார் (41), சதீஷ்குமார் (34) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி