பள்ளிபாளையம், குமாரபாளையம் சாலையில் அக்ரகாரம் காவிரி கரையோரம், தொழிலாளி சரவணன் (42) உறங்கிக் கொண்டிருந்தபோது, மணிகண்டன் மற்றும் சங்கர் ஆகியோர் பணத்தை பறிக்கும் நோக்கில் அவரைத் தாக்கியுள்ளனர். மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படும் இருவரும், சரவணனை சரமாரியாகத் தாக்கி, சிறிய பக்கெட் மூலம் தண்ணீர் ஊற்றி ஆபாசமாகப் பேசியுள்ளனர். காயமடைந்த சரவணன் பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், பள்ளிபாளையம் போலீசார் சம்பந்தப்பட்ட இருவரையும் கைது செய்தனர்.