குமாரபாளையம், பள்ளிப்பாளையம் பகுதிகளில் இயங்கும் சாய ஆலைகளில் இருந்து சுத்திகரிக்கப்படாத கழிவு நீர், சட்டவிரோதமாக இரவு நேரங்களில் கால்வாய் வழியாக காவிரி ஆற்றில் கலப்பதாக பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நடத்திய ஆய்வில், 2 நிறுவனங்கள் கழிவு நீரை ஆற்றில் கலந்தது தெரியவந்தது. இதனையடுத்து, அந்த நிறுவனங்களின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.