நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் வட்டம் சோழசிராமணி அருகே தேவம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ லிங்க பைரவி அம்மன் அருள்வாக்கு சக்தி பீடத்தில் மாசி மாத திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இதில், கொதிக்கும் எண்ணெயில் குளியல் நடத்திய குருஜி ஸ்ரீலாஸ்ரீ யோகேஸ்வரன் அருள்வாக்கு கூறினார். விழாவில் பன்னீர் செல்வம், தமிழரசி, கேப்டன் செல்வராஜ் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.