பள்ளிபாளையம் பகுதியில் சங்ககிரி சாலை தெற்கு பாளையத்தில் வசிக்கும் மணி என்பவர், தனது பல்சர் 2 சக்கர வாகனத்தை இரவு வீட்டின் வெளியே நிறுத்திவிட்டுச் சென்றார். காலையில் பார்த்தபோது வாகனம் திருடு போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.