கூலித்தொழிலாளி மயங்கி விழுந்து பலி

399பார்த்தது
கூலித்தொழிலாளி மயங்கி விழுந்து பலி
குமாரபாளையம் எம்.ஜி.ஆர். நகரில் வசிக்கும் 45 வயது கூலித்தொழிலாளி மாதேஷ், நேற்று காலை வீட்டில் குச்சி கிழங்கு சீவிக்கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். அவரை குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக மருத்துவர் தெரிவித்தார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாதேஷுக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரு மகன்கள் உள்ளனர். அவரது மனைவி 9 மாதங்களாக மகன்களுடன் கணவரின் வீட்டிற்கு அருகில் தனி வீட்டில் வசித்து வருகிறார், மாதேஷ் தனது தாயார் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி