பள்ளிபாளையத்தில் கிட்னி திருட்டில் ஈடுபட்ட நபர் கைது

2பார்த்தது
பள்ளிபாளையத்தில் கிட்னி திருட்டில் ஈடுபட்ட நபர் கைது
பள்ளிப்பாளையம் சுற்றுவட்டாரத்தில் விசைத்தறி தொழிலாளர்களின் வறுமையைப் பயன்படுத்தி, கிட்னி புரோக்கர்கள் ஆனந்தன் மற்றும் ஸ்டாலின்மோகன் ஆகியோர், 5 முதல் 10 லட்சம் ரூபாய் வரை கொடுத்து சட்டவிரோதமாக கிட்னி விற்பனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்ததும் புரோக்கர்கள் தலைமறைவாகினர். நாமக்கல் மருத்துவ அதிகாரிகள் விசாரணையில், திருச்சி, பெரம்பலுாரில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் கிட்னி தானம் செய்யப்பட்டது தெரியவந்தது. உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட விசாரணை குழு, கடந்த மாதம் 12ம் தேதி இரவு, பள்ளிப்பாளையம் அருகே பதுங்கியிருந்த ஆனந்தன் மற்றும் ஸ்டான்லி மோகன் ஆகியோரை கைது செய்து, குமாரபாளையம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தது.

தொடர்புடைய செய்தி