டூவீலரில் அதிக விலைக்கு மது விற்பனை செய்ததாக ஒருவர் கைது

1பார்த்தது
டூவீலரில் அதிக விலைக்கு மது விற்பனை செய்ததாக ஒருவர் கைது
குமாரபாளையத்தில் அதிக விலைக்கு மது விற்பனை செய்ததாக வட்டமலை பகுதியைச் சேர்ந்த பெருமாள் (52) என்பவர் கைது செய்யப்பட்டார். பள்ளிபாளையம் சாலை கௌரி மெஸ் அருகே ஹோண்டா ஆக்டிவா வாகனத்தில் மது விற்றுக் கொண்டிருந்த அவரை, இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்.ஐ. பிரபாகரன் தலைமையிலான போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். அவரிடமிருந்து 12 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், வாகனமும் கைப்பற்றப்பட்டது.

தொடர்புடைய செய்தி