பள்ளிபாளையம்: அரசு அலுவலங்களில் ஒயர் திருட்டு

0பார்த்தது
பள்ளிபாளையம்: அரசு அலுவலங்களில் ஒயர் திருட்டு
பள்ளிபாளையம் அடுத்த ஆவத்திபாளையத்தில் உள்ள களியனூர் ஊராட்சி மன்ற அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம், சமுதாய கூடம், விபிஆர்சி அலுவலகம், அங்கன்வாடி மையம் ஆகிய ஐந்து அலுவலகங்களின் மின் மீட்டர் வயர்கள் நேற்று முன்தினம் இரவு திருட்டு போனது. காலையில் அலுவலகங்களுக்கு வந்த ஊழியர்கள் மின்சாரம் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். மின்கம்பத்தில் ஆய்வு செய்தபோது வயர்கள் திருட்டு போனது தெரியவந்தது. இது குறித்து பள்ளிபாளையம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி