குமாரபாளையத்தில் டி.எஸ்.பி. அலுவலகம் அமைக்க வேண்டும் என அனைத்து கட்சியினர் தாசில்தார் பிரகாஷிடம் நேரில் மனு அளித்தனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உத்தரவின் பேரில், முன்னாள் அமைச்சர் தங்கமணி முயற்சியால் குமாரபாளையம் தாலுக்கா தொடங்கப்பட்டது. அதன் அலுவலகம் நகராட்சிக்கு சொந்தமான அண்ணா திருமண மண்டபத்தில் 2016, பிப். 27 முதல் செயல்பட துவங்கியது. தற்போது டி.எஸ்.பி. அலுவலகம் பள்ளிபாளையம் பகுதியில் அமையவிருப்பதாக வெளியான தகவலை அடுத்து, குமாரபாளையம் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, டி.எஸ்.பி. அலுவலகம் குமாரபாளையத்திலேயே அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மனு கொடுக்கப்பட்டது.