தனியார் கல்லூரியை கண்டித்து ஆர்ப்பாட்டம்

0பார்த்தது
தனியார் கல்லூரியை கண்டித்து ஆர்ப்பாட்டம்
குமாரபாளையம் தனியார் பொறியியல் கல்லூரியில் மாணவர்களுக்கு சுகாதாரமற்ற உணவு வழங்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நிவாரணம் கோரியும், கல்லூரி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில குழு உறுப்பினர் அரவிந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாணவிகளுக்கு கழிப்பறை வசதி போதுமானதாக இல்லை என்றும், உணவில் சுகாதாரமின்மை இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை உணவு பாதுகாப்புத் துறையினர் கல்லூரிகளில் ஆய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி