பள்ளி மேற்கூரைகள் இடிந்து விழும் நிலை. மாணவ மாணவிகள் அச்சம்

2பார்த்தது
பள்ளி மேற்கூரைகள் இடிந்து விழும் நிலை. மாணவ மாணவிகள் அச்சம்
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே விளாங்காட்டூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 26 மாணவர்கள் கல்வி கற்கின்றனர். போதிய மாணவர்கள் இல்லாத நிலையில், பள்ளியின் மேற்கூரை சேதமடைந்துள்ளது. காலை உணவு திட்டத்திற்கான அடுப்பு மற்றும் கேஸ் சிலிண்டர் மாணவர்கள் படிக்கும் இடத்திலேயே வைக்கப்பட்டுள்ளது பாதுகாப்பற்ற சூழலை உருவாக்குகிறது. பள்ளியின் பல்வேறு இடங்களில் விரிசல் காணப்படுவதால் மாணவர்கள் அச்சத்துடன் படிக்கின்றனர். எனவே, பள்ளியை சீரமைத்து புதிய கட்டிடங்கள் கட்டித்தர வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி