குமாரபாளையம் அருகே சுந்தரம் நகரில் செயல்பட்டு வரும் அன்னை கலர்ஸ் என்ற சிறு சாய தொழிற்சாலையை இடிப்பதற்காக வந்த மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளை, சாயப்பட்டறையினர் முற்றுகையிட்டு
போராட்டம் நடத்தினர். ஒருங்கிணைந்த சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.