குமாரபாளையம் பேருந்து நிலையத்தில் இடப்பற்றாக்குறை

85பார்த்தது
குமாரபாளையம் பேருந்து நிலையத்தில் இடப்பற்றாக்குறை
குமாரபாளையத்தில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் சார்பில், ரூ.738 லட்சம் மதிப்பில், பஸ் நிலையம் கட்டுமான பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. 2023, நவ. 30ல், பணி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, 2024, பிப். 15ல் பணிகள் ஒப்பந்ததாரரிடம் ஒப்படைக்கப்பட்டன. 12 மாதங்களில் பணிகள் முடிவடையும் என, கால நிர்ணயம் செய்யப்பட்டது. 

தொடர் மழை உள்ளிட்ட சில காரணங்களால், பணிகளில் கால தாமதம் ஏற்பட்டு, தற்போது, கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. தற்போது செயல்பட்டு வரும் தற்காலிக பஸ் நிலையத்தில், போதுமான இடவசதி இல்லாமல், பொதுமக்கள், அங்குள்ள கடையினர், பேருந்து ஓட்டுநர் ஆகியோர் அதிருப்தியில் இருந்து வருகின்றனர். 

பஸ் நிலையத்தில் போதிய இடவசதி இல்லாததால், பேருந்துகள் பஸ் நிலையத்திற்கு வெளியில் நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதனால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது. விரைவில் கட்டுமான பணிகள் முடித்து, புதிய பஸ் நிலையம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி