குமாரபாளையம் காவேரி நகர் காவிரி புது பாலம் அடியில் கஞ்சா விற்பனை செய்ததாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், போலீசார் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர். இதில் ரவி (எ) மாட்டு ரவி (31), ஆகாஷ் (20), தீபக்ராஜ் (19) ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத்தனர்.