நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளைம் அருகே வெப்படை அடுத்த சின்ன ஆனங்கூர் பகுதியில் பணம் வைத்து சேவல் சண்டை சூதாட்டம் நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில், வெப்படை போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஒரு தோட்டத்தில் கும்பலாக சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர். தினேஷ், ஜெய்கணேஷ், ரகுமான், சந்தோஷ், பூபதிராஜா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும், 5 டூவீலர்கள் மற்றும் 3 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ராமராஜ், முரளி, ஹரிதாஸ், சசி, மயில், பவித்திரன், சோமு, கவின், ஜனார்தனன், கிருஷ்ணகுமார், பூபதி, மதன் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.