நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே, ஐந்து பனை பகுதியைச் சேர்ந்த நந்தகோபால் (42) என்பவர், கடன் கொடுத்தவர்கள் மற்றும் கடன் பெற்றுத் தந்த நண்பர்களின் தொல்லையால் மனமுடைந்து, இன்று அதிகாலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தனது செல்போனில் வீடியோ வாக்குமூலம் பதிவு செய்துள்ளார். சுமார் 5 லட்சம் ரூபாய் கடன் பெற்றுத் தந்ததாகக் கூறப்படுகிறது.