நாமக்கல்: தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட 100 பேர் கைது

828பார்த்தது
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. எலச்சிபாளையம் பகுதி விவசாயிகள், அனுமதி இன்றி செயல்படும் தனியார் கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் சேதங்கள் ஏற்படுவதாகவும், வீடுகளில் கற்கள் விழுவதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டினர். இது குறித்து பலமுறை மனு அளித்தும் பயனில்லை என கூறிய அவர்கள், போராட்டத்தை தொடர்ந்தனர். காவல்துறையினர் நூற்றுக்கும் மேற்பட்டோரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி