உலகப் புகழ் நாமக்கல் ஆஞ்சநேயர் ஆலயத்தில் ஆனி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு 1008 லிட்டர் பால் அபிஷேகம் நடைபெற்றது.
நாமக்கல் மாநகரில் மையப் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ நரசிம்ம சுவாமி கோவில் எதிரே ஸ்ரீ நரசிம்ம சுவாமியை வெட்ட வெயில் மழை பாராமல், வெயில் பாராமல் இருகரம் கூப்பி வணங்கி நிற்கும் 18 அடி ஒற்றைக் கல்லினால் ஆன உலகப் புகழ்பெற்ற நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் ஆலயத்தில் ஆனி முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு அதிகாலை நடை திறக்கப்பட்டு 9.00 மணிக்கு 1008 வடமாலை சாற்றப்பட்ட பின்னர் 10.30க்கு பட்டாச்சாரியார்கள் நல்லெண்ணெய்காப்பு, பஞ்சாமிர்தம், தேன், நெய், பேரிச்சை, கற்கண்டு, பழவகைகள், சீகக்காய், 1008 லிட்டர் பால், தயிர், மஞ்சள், சந்தனம், சொர்ணம் உள்ளிட்ட நறுமணப் பொருட்களால் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் சிறப்பு அலங்காரம், மகாதீபம் காண்பிக்கப்பட்டது. இதில் தமிழ்நாடு உட்பட பல மாநிலங்கள், வெளிநாடுகள் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டனர். பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆஞ்சநேயரை வணங்கிச் சென்றனர்.