நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 500 லிட்டர் பால் அபிஷேகம்

432பார்த்தது
நாமக்கல் கோட்டை சாலையில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆஞ்சநேயர் கோயிலில் இன்று சனிக்கிழமை சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. இதில் சுமார் 500 லிட்டர் பால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதைக் காண நாமக்கல் சுற்றுவட்டாரப் பகுதி மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர்.