நாமக்கல்: 56 டன் காய்கறி ரூ. 21. 44 லட்சத்திற்கு விற்பனை

80பார்த்தது
நாமக்கல் கோட்டை மெயின் சாலையில், உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினமும், அதிகாலை, 5:00 முதல், 10:00 மணி வரை, நாமக்கல் பகுதியில் உள்ள விவசாயிகள், தங்கள் தோட்டங்களில் விளைந்த காய்கறி, பழங்களை கொண்டுவந்து நேரடியாக விற்பனை செய்கின்றனர். 

பொதுமக்களும் உழவர் சந்தைக்கு வந்து, தங்களுக்கு தேவையான காய்கறிகளை வாங்கி செல்கின்றனர். வழக்கமாக, வாரவிடுமுறை நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில், அதிகளவில் வாடிக்கையாளர்கள் வந்து, தங்களுக்கு ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறி, பழங்களை வாங்கி செல்வது வழக்கம். தற்போது, மாசி மாதம் முகூர்த்த சீசன் துவங்கியுள்ளது. இதனால் நேற்று, வழக்கத்தை விட உழவர் சந்தையில் விறுவிறுப்பாக வியாபாரம் நடந்தது. 

மொத்தம், 222 விவசாயிகள் உழவர் சந்தைக்கு காய்கறி, பழங்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். அதன்படி, 47,885 கிலோ காய்கறிகள், 8,180 கிலோ பழங்கள், 25 கிலோ பூக்கள் என மொத்தம், 56,090 கிலோ விளைபொருட்கள் உழவர் சந்தைக்கு கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்பட்டன. அவற்றை, 11,218 பொதுமக்கள் வாங்கி சென்றனர். அதன் மூலம், 21 லட்சத்து, 44,410 ரூபாய்க்கு விற்பனையானது.

தொடர்புடைய செய்தி