நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் அருகே உள்ள ரங்கப்பன் நாயக்கன்பாளையம் பகுதியில் சட்டவிரோதமாக ஏரியில் மண் கடத்தல் நடைபெறுவதாகவும், இதை அதிகாரிகள் தடுக்காமல் வேடிக்கை பார்ப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த விவசாயி ஒருவர், தேசியக்கொடியை ஏந்தி வந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.