நாமக்கல் பூங்கா சாலையில் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்று மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, தலைமுடியை விரித்து ஒப்பாரி வைத்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலையில் அமர்ந்து நடத்திய இந்த ஆர்ப்பாட்டத்தால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.