நாமக்கல் பூங்கா சாலையில் அங்கன்வாடி பணியாளர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டாவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக முதல்வர் தேர்தல் வாக்குறுதிப்படி அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், மே மாதம் முழுவதும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு விடுமுறை வழங்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.