நாமக்கல் பூங்கா சாலையில் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள், திமுக அரசு வெளியிட்ட தேர்தல் வாக்குறுதி என்ன ஆனது என வலியுறுத்தி, தொடர்ந்து பத்தாவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று அவர்கள் அனைவரும் "என்ன ஆச்சு என்ன ஆச்சு" என கோஷங்கள் எழுப்பினர். இதனால் அப்பகுதி முழுவதும் பரபரப்பு காணப்பட்டது. அங்கன்வாடி மற்றும் பணியாளர்கள் சங்கத்தினர் இரவு முழுதும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.