நாமக்கல் மையப்பகுதியில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயிலில் இன்று சிவனுக்கு சுமார் 100 கிலோ அரிசி, 50 கிலோ காய்கறிகள் மற்றும் பழங்களைக் கொண்டு சிறப்பு அன்னாபிஷேகம் செய்யப்பட்டது. இந்த அலங்காரப் பணிக்கு 3 மணி நேரத்திற்கும் மேலானது. ஏராளமான பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் பாடல்கள் பாடி இறைவனை வழிபட்டனர்.