நாமக்கல் அரசு கலைக்கல்லூரியில் ஆண்டு விழா

80பார்த்தது
நாமக்கல் அரசு கலைக்கல்லூரியில் ஆண்டு விழா
நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் மாணவ மாணவியர்களுக்கான விளையாட்டு விழா மற்றும் கல்லூரி ஆண்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் விலங்கியல் துறைத்தலைவர் இராஜசேகர பாண்டியன் அனைவரையும் வரவேற்றார். கல்லூரி முதல்வர் இராஜா தலைமை வகித்து 2024-2025 ஆம் கல்வியாண்டின் கல்லூரி ஆண்டறிக்கையை சமர்ப்பித்தார். கல்லூரி உடற்கல்வி இயக்குநர் கார்த்திக் உடற்கல்வித்துறை ஆண்டறிக்கையை சமர்ப்பித்தார். 

இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராக நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச. உமா சிறப்புரையாற்றி பேசுகையில், மாணவ மாணவியர்கள் தமிழ்நாடு அரசு வழங்கும் அனைத்து நலத்திட்டங்களையும் பயன்படுத்தி நன்முறையில் பெற்றோரை மட்டுமே கண்முன் வைத்து நன்றாக படித்து மேன்மேலும் உயர வேண்டும் என்று வாழ்த்தி பேசினார். மேலும் பல்கலைக்கழகத் தேர்வில் முதலிடம் பெற்ற மாணவ மாணவியர்களுக்கும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கும் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார்.

தொடர்புடைய செய்தி