நாமக்கல் பூங்கா சாலையில் உள்ள காந்தி சிலை அருகே, சிப்காட் எதிர்ப்பு இயக்கத்தினர் இன்று காலை பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கைகளில் பாக்கு தட்டு ஏந்தி, விவசாய நிலங்களை தமிழக அரசு விட்டுவிட வேண்டும் என அறவழியில் அவர்கள் போராடினர். தமிழக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.