மத்திய, மாநில அரசுகள் ஜோதிடர்கள் நலவாரியம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என நாமக்கல்லில் நடைபெற்ற தென்னிந்திய பரம்பரை ஜோதிடர்கள் சங்கத்தின் தீர்மானம் நிறைவேற்றம்! தென்னிந்திய பரம்பரை ஜோதிடர்கள் நலச்சங்கத்தின் சார்பில் நாமக்கல்- திருச்செங்கோடு சாலையில் உள்ள எஸ்.ஆர். திருமண மண்டபத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டத் தலைவர் கே.வி. மாதையன் அனைவரையும் வரவேற்று பேசினார்.
சங்கத் தலைவர் ருத்ர மணிகண்டன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக சங்கத்தின் கௌரவத் தலைவர் ஒரத்தநாடு கணேசன் கலந்துகொண்டு சிறந்த ஜோதிடர்களான ஜோதிட மாமணி மற்றும் ஜோதிட செம்மல் விருதுகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார். மேலும் சங்க நிர்வாகிகளுக்கு அடையாளட்டை வழங்கினார். கூட்டத்தில் கேரளா, கர்நாடகா, தமிழகத்தைச் சேர்ந்த ஜோதிடர்கள் பலர் கலந்துகொண்டனர்.